Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக தலைமையின் எதிர்ப்பை மீறி உண்மை புத்தகத்தை வெளியிடம் ஆ. ராஜா

திமுக தலைமையின் எதிர்ப்பை மீறி உண்மை புத்தகத்தை வெளியிடம் ஆ. ராஜா

Advertiesment
திமுக தலைமையின் எதிர்ப்பை மீறி உண்மை புத்தகத்தை வெளியிடம் ஆ. ராஜா
, திங்கள், 18 ஜூலை 2016 (19:29 IST)
ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். ராஜாவின் இன் மை டிஃபன்ஸ் (IN MY DEFENCE) புத்தகம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ளது.


 
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா கைது செய்யப்பட்டு 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வெளியிடப் போவதாக கூறியிருந்தார். ஆனால் சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்ட நிலையில் அப்புத்தகம் வெளியாவதை திமுக தலைமை விரும்பவில்லை. இதனால் ஆ. ராஜாவும் புத்தகம் வெளியிடுவதை ஒத்தி வைத்திருந்தார்.

தற்போது இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. அதே கால கட்டத்தில் தம்முடைய ’இன் மை டிஃபென்ஸ்’ புத்தகத்தை வெளியிட ஆ. ராஜா முடிவு செய்துள்ளார். இப்புத்தகம் பெளியில் வந்தால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கருணாநிதி உள்ளிட்டோர் ராஜா புத்தகம் வெளியாவதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆ. ராஜாவின் புத்தகம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என  கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொல்லப்படுவதற்கு முன் காவலரின் உணர்ச்சிகர பதிவு