Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ் வந்ததால் துப்பாக்கியை நீட்டிய இளம்பெண்

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (11:43 IST)
அமெரிக்காவின் ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ் வந்ததால் வெயிட்டரிடம் வாக்குவாதத்தில் துப்பாக்கியை எடுத்து நீட்டியுள்ளார் ஒரு இளம்பெண்

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் அமைந்திருக்கும் மெக் டோனல்ட்ஸ் உணவகத்திற்கு ஆசியா வெஸ்டர் என்ற 20 வயது இளம்பெண் சென்றுள்ளார். அங்கே இளம்பெண் ஆர்டர் செய்த உணவை வெயிட்டர் கொண்டுவந்துள்ளார்.

பின்பு அந்த உணவிற்கு தொட்டுக்கொள்ள ஜெல்லி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வெயிட்டரோ ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ் கொண்டுவந்துள்ளார். இதனால் வெஸ்டருக்கும் வெயிட்டருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த வெஸ்டர் வெயிடரை நோக்கி திடீரென துப்பாக்கியை நீட்டியுள்ளார்.

துப்பாக்கியை கண்ட வெயிட்டர் அலறியடித்து கொண்டு ஓடினார். மேலும் அங்குள்ளவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வெயிட்டரை நோக்கி துப்பாக்கியை எடுத்து நீட்டியது அமெரிக்க சட்டபடி குற்றம் என ஆசியா வெஸ்டரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments