Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவுக்காக சீனாவை பகைக்கிறதா இந்தியா? – ஒரு கடல்வழி தகராறு!

அமெரிக்காவுக்காக சீனாவை பகைக்கிறதா இந்தியா? – ஒரு கடல்வழி தகராறு!
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (18:33 IST)
அமெரிக்காவும், சீனாவுக்கும் இடையேயான பொருளாதார யுத்தம் தற்போது கடல்வழி வணிகத்திலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலக நாடுகளுக்கிடையேயான பொருளாதார வளர்ச்சிக்கு, மேம்பாட்டுக்கு முக்கிய பாதையாக அமைந்திருப்பது கடல். மிகப்பெரும் வணிக பாதையாக இருக்கும் கடலை ஆக்கிரமித்து கொள்வதிலும் அமெரிக்கா, சீனா இடையே போட்டிகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என நேரடியாக சொன்ன சீனா செய்தும் காட்டியது. ஹாங்காங் செல்லும் அமெரிக்க வணிக கப்பல்களை தடை செய்த சீனா, போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் அளித்து வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக கூறியுள்ளது.

இதனால் அமெரிக்கா சீனாவுக்கு பதிலடி கொடுக்க நேரம் பார்த்த நிலையில் இந்தியா மூலம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கடல்நீர் வழிப்பாதையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா அடிக்கடி அனுமதி இல்லாமல் இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளில் பயணித்து வருவதாக தெரிகிறது. இலங்கையுடனான வணிக ஒப்பந்தங்களின்படி அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் சீன கப்பல்கள் இந்திய எல்லை கடல்களை பயன்படுத்தி கொள்கின்றன.

இந்நிலையில் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா ‘அனுமதியில்லாமல் இந்திய கடல் எல்லைக்குள் வர வேண்டாம்’ என கூறியுள்ளது. ஹாங்காங்கில் அமெரிக்க கப்பல்கள் தடுக்கப்பட்டதற்கு பதிலடி சம்பவமா இது என உலக அரசியல் வட்டாரங்கள் பேசி வந்தாலும், பொதுவான நாட்டு பாதுகாப்பு அடிப்படையிலான எச்சரிக்கை இது என்றே கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள்: தமிழக அரசு அதிரடி முடிவு