Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வூஹான் மருத்துவமனை இயக்குநர் கரோனோ வைரஸ் தாக்குதலால் மரணம் !

Advertiesment
வூஹான் மருத்துவமனை இயக்குநர் கரோனோ வைரஸ் தாக்குதலால் மரணம் !
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (16:46 IST)
வூஹான் மருத்துவமனை இயக்குநர் கரோனோ வைரஸ் தாக்குதலால் மரணம்
வூஹான் மருத்துவமனை இயக்குநர் கரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரோனோ வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் பீதியில் உள்ளது.  சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து தொடங்கிய வைரஸ்  அந்நாட்டில் பரவலாகியுள்ளது. பலி எண்ணிக்கை 1900 ஆகும். இதுவரை கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வூஹானில் உள்ள வூசாங் மருத்துவனையின் இயக்குநர் லியு சிமிங் கொரோனோ வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய் கிழமை உயிரிழந்தார். அவரை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை என அங்குள்ள மீடியாக்கள் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பாக கடந்த வாரம் மருத்துவ சேவை ஆற்றி வந்த 6 பேர் கொரோனோ வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் உயரும் பணவீக்கம் உங்கள் சமையலறையை எப்படி பாதிக்கும்?