உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்க- இலங்கை அணிகள் இடையேயான இன்றைய போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 429 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றனர். இனந்த நிலையில், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையே போட்டி நடந்து வருகிறது.
ஸ்ரீலங்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில் முதலில் சவுத் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
இதில், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பேட்ஸ்மேனகள், ககாக் 100 ரன்னும், டசன் 108 ரன்னும், கிளாசன் 32 ரன்னும், மில்லர் 33 ரன்னும் அடித்தனர். ஏய்டன் மார்க்ரம் வெறும் 49 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில், 106 ரன்னுடன் அவுட்டானர்.
கடந்த 48 ஆண்டு கால உலகக் கோப்பை தொடர வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் எய்டன் மார்க்ரம்.
இந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 429 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கை அணி தரப்பில், தில்ஷான் 2 விக்கெடும், ரஜிதா,பதிரனா, துனித் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.