நீச்சல் குளம் உள்ளிட்ட சகல வசதிகளோடு உருவாக்கப்பட்டுள்ள 100 அடி நீள கார் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜே ஓர்பெக் என்பவர் 100 அடி நீள சொகுசு கார் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த காரில் நீச்சல் குளம், பார், ஹெலிகாப்டர் தரையிரங்கும் வசதி என அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் உலகின் நீளமான காராக கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக இதே கார் 1986ல் உலகின் நீளமாக கார் என சாதனை படைத்துள்ளது. அப்போது 60 அடி நீளம் உருவாக்கப்பட்டிருந்த காரில் மேலும் 40 அடி சேர்த்து சொந்த சாதனையையே முறியடித்துள்ளது அமெரிக்கன் ட்ரீம் என்ற அந்த கார்.