Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடை விதிப்பதை நிறுத்துங்க.. இல்லாட்டி உங்களுக்குதான் பிரச்சினை! – ரஷ்யா வேண்டுகோள்!

தடை விதிப்பதை நிறுத்துங்க.. இல்லாட்டி உங்களுக்குதான் பிரச்சினை! – ரஷ்யா வேண்டுகோள்!
, வியாழன், 10 மார்ச் 2022 (12:21 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதால் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்துள்ள நிலையில் தடைகளை தளர்த்த வேண்டுமென ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சமடைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்து பேசிய ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் “ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் மூலம் உலக சந்தை பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்த பாதிப்பு மேற்கத்திய நாடுகளிலும் எதிரொலிக்கும். ரஷியா மீது அமெரிக்கா நேரடி போரை நடத்துவதற்கு பதில் பொருளாதார போரை நடத்துகிறது. இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவி விலகுகிறார் பஞ்சாப் முதல்வர்: கவர்னரிடம் ராஜினாமா கடிதம்!