Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

42 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – சீனாவை பின்னுக்கு தள்ளிய நாடுகள்!

42 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – சீனாவை பின்னுக்கு தள்ளிய நாடுகள்!
, புதன், 1 ஏப்ரல் 2020 (08:17 IST)
உலகளவில் நாளுக்குநாள் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் 180 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் உலகம் முழுவதும் 4 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

காலை நிலவரப்படி இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 12,428 ஆக உள்ளது. 1.05.,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 8,464 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆயிரமாக உள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 3883 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொகுசாக ஹோட்டலில் தனிமைப் படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர் !