ஜெர்மனியில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் தாய்லாந்து மன்னர்.
உலகம் முழுவதும் 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 42,000 ஐத் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் சாமான்ய மக்கள் அல்லாது அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரையும் பாதித்துள்ளது. வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள தனிமைப் படுத்திக் கொள்ளுதலே ஒரே வழி என்று சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொர்ன் ஜெர்மனியில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அதுவும் எப்படி தெரியுமா? தனது மனைவிகள் மற்றும் பணிப்பெண்கள் என 20 பேரை துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார், தான் தங்கியுள்ள ரெசார்ட்டில் வேறு யாரும் தங்கிவிடக் கூடாது என்று ரெசார்ட் முழுவதையும் புக் செய்துள்ளார்.