Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினமும் 3 லட்சம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: உலக கொரோனா நிலவரம்!

தினமும் 3 லட்சம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: உலக கொரோனா நிலவரம்!
, ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (08:13 IST)
இந்தியாவில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர்களும், உலக அளவில் தினமும் 3 லட்சம் பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உலக சுகாதார மையத்தின் தகவலின்படி தெரிய வந்துள்ளது.
 
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,982,785  என்று அறிவிக்க்ப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 லட்சம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 961,393 என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,583,241 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,967,403 என்றும், பலியானோர் எண்ணிக்கை 203,824 என்றும், குணமானோர் எண்ணிக்கை 4,223,693 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,398,230 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,299,724 என்றும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 86,774 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,528,347 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,820,095 என்றும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 136,565 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திடீர் மரணம் ! தொண்டர்கள் அதிர்ச்சி