Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து வாழும் பெண்!

Vietnam
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (21:00 IST)
50 வருடங்களாக தண்ணீர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து ஒரு பெண் உயிர்வாழ்ந்து வருகிறார்.

இந்த உலகில் நம்மைச் சுற்றி எத்தனையோ வித்தியாசமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதில் பல சம்பவங்கள் நம்மை ஆச்சயத்தில் ஆழ்த்துகின்றன. இதில் பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனையாகவும்,  மக்களின் மனதிலும் இடம் பிடிக்கின்றன.

அந்த வகையில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மூதாட்டி புய் தி லொய்(75). இவர் 50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார்.

1963 ஆம் ஆண்டில் இவரை மின்னல் தாக்கியதில்  இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை கைவிட்டுள்ளார். உணவின் வாசனை பிடிக்கவில்லை எனவும், தன் குடும்பத்தினர் சமைத்தாலும் அவர் ருசிபார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிக்ஜாம் புயலால் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிப்பு- திரிஷா கவலை