வியட்நாமை சேர்ந்த முதியவர் ஒருவர் பல ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வரும் செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய 21ம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தூக்கமின்மை. மன அழுத்தம், வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தூக்கத்தை தொலைத்து தூக்கம் வராதா என ஏங்குபவர்கள் பலர். ஆனால் வியட்நாமை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 60 ஆண்டு காலமாக தூங்காமல் இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாராம்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவர் தாய் நகோக். இவர் 1962ல் தனது 20வது வயதில் வித்தியாசமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்த அவருக்கு தூக்கம் வராமலே இருந்துள்ளது. இதுகுறித்து பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்தபோதும் அவருக்கு தூக்கம் வரவில்லையாம்.
இதனால் தூங்காமலே இருந்து பழகிவிட்டதால் கடந்த 60 ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வருகிறார் அதிசய தாத்தா தாய் நகோக். பொதுவாக தூங்காமல் இருந்தால் பலவித உடல்நல கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுவதுண்டு. ஆனால் அதிசய தாத்தாவோ தூக்கம் இல்லாவிட்டாலும் உடல்நல குறைகள் இன்றி மகிழ்ச்சியாக 80 ஆண்டுகளாக வாழ்ந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.