Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிரைக் காப்பாற்றிய கொரோனா – ’ரேப்’ செய்ய முயன்றவனிடம் புத்திசாலித்தனமாக தப்பித்த பெண்!

உயிரைக் காப்பாற்றிய கொரோனா – ’ரேப்’ செய்ய முயன்றவனிடம் புத்திசாலித்தனமாக தப்பித்த பெண்!
, சனி, 8 பிப்ரவரி 2020 (08:10 IST)
கோப்புப் படம்

சீனாவில் 600க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலாக ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பல நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயர் பீதியைக் கிளப்பி வருகிறது. அப்படிப்பட்ட கொடூரமான வைரஸ் ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

சீனாவின் வூஹான் நகருக்கு அருகில் உள்ள ஜிங்ஷாய் எனும் நகரில் பெண்  ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் கத்த முயல அவரின் கழுத்தை நெறித்துள்ளான்.

அப்போது அவனிடம் இருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக யோசித்த அந்த பெண் இரும ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் இருமிய அவர் தான் வூஹான் மாகாணத்தில் இருந்து வருவதாகவும் தனக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்ட அந்த இளைஞன் அந்த இடத்தில் இருந்து தப்பித்துள்ளான். அதன் பின் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞனைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் செஞ்சா கொரோனா தாக்காது: பிரபல நடிகரின் மகள் தரும் குறிப்புகள்