Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதெல்லாம் செஞ்சா கொரோனா தாக்காது: பிரபல நடிகரின் மகள் தரும் குறிப்புகள்

Advertiesment
இதெல்லாம் செஞ்சா கொரோனா தாக்காது: பிரபல நடிகரின் மகள் தரும் குறிப்புகள்
, வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (19:41 IST)
பிரபல நடிகர் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகன் திவ்யா ஒரு சமூக சேவகி என்பதும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த ஆய்வு செய்து வருபவர் என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் தமிழக அரசுடன் பேசி குழந்தைகளுக்கு காலை உணவாக ஊட்டச்சத்து உணவு அளிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தின் தாக்கும் அபாயம் இருப்பதாக கருதப்படும் நிலையில் கொரோனா வைரசில் இருந்து தப்பிப்பது எப்படி என்று திவ்யா சில குறிப்புகளை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த குறிப்புகள் இதோ:

webdunia
இதெல்லாம் செஞ்சா கொரோனா தாக்காது
 
1. இறைச்சிகளுக்கும், சமைத்த உணவுகளுக்கும் வெவ்வேறு வெட்டும் பலகைகளையும், கத்திகளையும் பயன்படுத்துங்கள்.
 
2) சமைத்த உணவுகளையும், இறைச்சியையும் கையாளும்போது கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
 
3) நன்கு சமைத்த உணவுகளையே உண்ணுங்கள்.
 
4) ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்பாட்டுக்குப் பிறகு உடனடியாக அப்புறப்படுத்திவிடவும். அப்புறப்படுத்தியதும் கைகளை நன்கு கழுவி விடவும்.
 
5) இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கவும்.
 
6) அழுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலக்கவும்.
 
7) நோய்வாய்ப்பட்ட விலங்குகளிடமிருந்தும், கெட்டுப்போன மாமிசங்களிடமிருந்தும் விலகியிருக்கவும்.
 
8) குறிப்பாக விலங்குகளையும், விலங்குகளின் பொருட்களையும் தொட்ட பிறகு அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள்.
 
9) இருமலோ, காய்ச்சலோ இருந்தால் பயணத்தைத் தவிர்க்கவும்.
 
10) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணுங்கள்
 
மேற்கண்ட இந்த குறிப்புகளை கடைபிடித்தால் கொரோனா மட்டுமின்றி எந்தவித தொற்று நோய்களும் தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வசதி.. கடம்பூர் ராஜூ