உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசியின் செயல்திறனை குறைத்து வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய திரிபு அடைந்த கொரோனா வேரியண்டான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 63 நாடுகளின் கண்டறியப்பட்டுள்ளது. முதல்கட்ட ஆய்வு தகவலின்படி தற்போதுள்ள தடுப்பூசிகளின் திறனை குறைத்து ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒமிக்ரான் சமூக பரவலாக மாறினால் டெல்டா வகை வைரஸை விட வேகமாக பரவும். ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்த தரவுகள் அதிகம் இல்லாததால் அதன் பாதிப்பு வீரியம் குறித்து துல்லியமாக கணிப்பது கடினம்” என்று தெரிவித்துள்ளது.