உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியதற்கு நேரடியாக பதிலளித்துள்ளது உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு தகவல்களை திரட்டி அதிலிருந்து மக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தபோவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த குற்றசாட்டிற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நேரடியாகவே பதில் அளித்துள்ளார். அதில் “உலகம் சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்களை காப்பாற்ற நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். தயவு செய்து கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்யாதீர்கள். இந்த ஆபத்தான வைரஸை தோற்கடிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் “ என கூறியுள்ளார்.