Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதின் அரசை கவிழ்க்க ஜோ பைடன் திட்டமா? – வெள்ளை மாளிகை விளக்கம்!

புதின் அரசை கவிழ்க்க ஜோ பைடன் திட்டமா? – வெள்ளை மாளிகை விளக்கம்!
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (09:51 IST)
ரஷ்யாவில் புதின் அரசை கவிழ்க்க திட்டமிடும் வகையில் ஜோ பைடன் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் வெள்ளை மாளிகை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகியும் இதுவரை சமரச முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் உக்ரைன் மீதான போர் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் அமைச்சர்கள் மற்றும் நேட்டோ படை வீரர்களோடு அண்மையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நாட்களுக்கு ஆட்சியில் இருக்க முடியாது என பேசியதாக செய்திகள் வெளியாகியது. இதனால் ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற வகையில் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை புதின் தனது அண்டை நாடுகள் மீதோ அல்லது அந்த பிராந்தியத்தின் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது என்ற கருத்தில்தான் அமெரிக்க அதிபர் பேசியதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1,421 ஆக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!