Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு புகார்: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் கைது..!

Mahendran
சனி, 25 ஜனவரி 2025 (11:31 IST)
சொத்துக்குவிப்பு புகாரில்  இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் மற்றும் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. இவர் மீது சொத்துக்குவிப்பு புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னால் யோஷிதா ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை   செய்த நிலையில் விசாரணையின் முடிவில் பண மோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து யோஷித ராஜபக்சே இன்று சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  இலங்கை அரசின் தலைமை  வழக்கறிஞர் ஆலோசனைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய தேதி அறிவிப்பு..!

ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு கோமியம் அனுப்பி போராட்டம்.. திராவிட தமிழர் கட்சியினர் அதிரடி..!

கஞ்சா செடி வளர்க்க மாநில அரசு அனுமதி.. ஆனால் ஒரு நிபந்தனை..!

30 ஆண்டுகளில் முதல்முறை.. நியூயார்க் நகரில் கடந்த 5 நாட்களில் துப்பாக்கிச் சூடு சம்பவவே இல்லை!

பூச்சிக்கொல்லி கலந்த மிளகாய் தூள்.. திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments