Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்திக்கலாம்னு இருக்கேன்..? மனம் மாறிய புதின்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:34 IST)
உக்ரைன் மீது ரஷ்யா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலமாக போர் நடத்தி வரும் நிலையில் போரை முடித்துக்கொள்ள புதின் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கியது. உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதில் ரஷ்யாவுக்கு விருப்பம் இல்லாததே இந்த போருக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த போரில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

ரஷ்யாவை விட உக்ரைன் சிறிய ராணுவத்தையே கொண்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வழங்கும் நிதி உதவி மற்றும் ஆயுத உதவியை கொண்டு ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட போர் தொடங்கியது முதலாக நாட்டை விட்டு வெளியே செல்லாத உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார்.

இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுடனான போரை முடித்துக் கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் உக்ரைனிடம் ஒப்படைக்கப்படுமா? என்பது பற்றி தெரியவில்லை. விரைவில் இதுகுறித்து அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

கழிப்பறைக்கு அறிஞர் அண்ணா பெயர்.. இரவோடு இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments