அமெரிக்க தயாரிப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது.
இப்போரில் இருதரப்பிலும், இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில்,உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றன.
எனவே, அமெரிக்க வழங்கிய ஏவுகணை மூலம் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இதில், அமெரிக்கா நாட்டு தயாரிப்பான 4 ஏவுகணைகளை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.