பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்று போலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் ஒருவர் பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும், பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும்.
பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. "உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" .
ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே, நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்
உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்.
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தகூடாது.
நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுவும் தர்மம் தான்..!
என் வார்த்தைகளில் நம்பிக்கை வை எதை நீ தேடினாயோ அது உன்னைத் தேடி வரும்.
நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக இருக்கிறேன் நல்லதே நடக்கும்.