Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணவு திருடியதாக 7 வயது சிறுவனை உயிருடன் தீயிட்டு கொன்ற கொடூர கும்பல்- வைரலாகும் பகீர் வீடியோ

Advertiesment
Nigerian boy
, திங்கள், 21 நவம்பர் 2016 (12:11 IST)
நைஜீரிய கடைகளில் உணவு திருடியதாக சிறுவன் ஒருவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் நைஜீரியா  லாகோஸ் பகுதியில் உள்ள கடைகளில் சிறுவன் ஒருவன் உணவு திருடியதாக பிடிபட்டான். அவனை பிடித்த அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் அவனது கை, கால்களை கட்டி வைக்கிறது. அவன் மீது கொடூரமாக தாக்குகிறது அந்த கும்பல். பலத்த காயம் அடைந்த அந்த சிறுவன தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறான். ஆனாலும் மனம் இளகாத அந்த அரக்க கும்பல் சிறுவன் மீது பெட்ரோல் ஊற்றப்பட்ட டயரை போட்டி அதில் தீ வைத்தன. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவனுக்கு 8 வயதிற்குள் இருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அண்னாசலையில் உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி - பரபரப்பு தகவல்