Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை அண்னாசலையில் உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி - பரபரப்பு தகவல்

Advertiesment
Chenani
, திங்கள், 21 நவம்பர் 2016 (12:03 IST)
சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை அண்ணாசலையை அடுத்த ஒயிட்ஸ் சாலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. 
 
இந்த வங்கியில் ஏராளமானோர் தினமும் தங்களின் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர். மேலும், கடந்த 8 ம் தேதியிலிருந்து, ஏராளமனோர், தங்களின் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இந்த வங்கியில் டெபாசிட் செய்து வந்தனர்.
 
இந்லையில் நேற்று இரவு, இந்த வங்கியின் சுவற்றில் ஓட்டையிட்டு, கொள்ளையர்கள் உள்ளே புக முயன்றுள்ளனர். ஆனால், அப்போது வங்கியில் இருந்த அலாரம் அடித்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
இதுகுறித்து அண்ணாசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஏதாவது பதிவாகியுள்ளதா எனவும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
சென்னையின் ஒரு முக்கிய சாலையில் உள்ள ஒரு வங்கியில், கொள்ளை முயற்சி நடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்பரேஷன் ஓவர்... ஓவர்... - அப்பல்லோ திரும்பிய அமைச்சர் படைகள்