Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மூன்று நாள் தங்குகிறார் கோத்தபயா: என்ன செய்ய போகிறார் வைகோ!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (21:15 IST)
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே அபாரமாக வெற்றி பெற்று அந்நாட்டின் அடுத்த அதிபராக சமீபத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கோத்தபாய ராஜபக்சேவின் சகோதரர் மஹிந்த ராஜராஜபக்சேவின் ஆட்சியில் தான் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர் என்பதால் தமிழர்களின் ஆதரவு சுத்தமாக கோத்தபயாவுக்கு இல்லை. அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் அவரை எதிரியாக பார்த்து வருகின்றனர். மேலும் தமிழக அரசியல் கட்சிகள் கோத்தபாயவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர் 
 
இந்த நிலையில் கோத்தபயா ராஜபக்சே தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளார். கோத்தபய ராஜபக்சே நாளை முதல் 3 நாட்கள் அரசுமுறை  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா வரும் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் ஒரு சில முக்கிய அமைச்சர்களையும் சந்திக்க இருக்கிறார். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்தநிலையில் கோத்தபாயவின் இந்திய வருகைக்கு வைகோ உள்ளிட்ட சில தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோத்தபய வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாகவும் வைகோ உள்ளிட்டோர்கள் கூறி வருகின்றனர்
 
தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டிருப்பதால் வைகோ டெல்லியில்தான் உள்ளார் என்பதால் டெல்லி வரும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் அவர் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments