ஒரு புதிய அறிக்கையின்படி நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் அளவு இந்த ஆண்டு (2019) பெருமளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இணையதள சஞ்சிகையான `கார்பன் ப்ரீஃபில்` மூன்று ஆற்றல் நிபுணர்கள், உலகமுழுவதும், ஆற்றல் துறையின் முதல் ஏழிலிருந்து பத்து மாதங்களின் தகவல்களை வைத்து இந்த சரிவு 3% வரை எனக் கணித்துள்ளனர்.
இந்த ஆய்வில், நிலக்கரியில் மின்சாரம் தயாரிப்பது குறைந்துள்ளதால் 2019ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மின்சாரம் தயாரிக்கப்படுவது இந்த அளவு குறைந்திருந்தாலும், சர்வதேச வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைப்பதற்கான அளவைக் காட்டிலும் அது அதிகமாகவே உள்ளது.
மிகப்பெரிய சரிவு
கடந்த ஒரு நூற்றாண்டாக மின்சார தயாரிப்பின் முக்கிய ஆதாரமாக நிலக்கரி விளங்கிவந்தது. மேலும் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவது தடைப்படாமல் நடந்து வந்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்த நாடுகளில் நிலக்கரி பயன்பாடு குறைந்துள்ளது, தொழிற்சாலைகளின் முடிவுகளின் தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
"இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதற்கான செலவு குறைவு என்பதால் பல நாடுகளின் பொருளாதாரத்தில் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையே காணப்படுகிறது," என லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னோமிக்ஸில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் கிராந்தம் ஆய்வு நிறுவனத்தின் கொள்கை இயக்குநர் பாப் வார்ட் தெரிவிக்கிறார்.
இருப்பினும், 2019ஆம் ஆண்டில் நிலக்கரி கொள்முதல் குறைந்துள்ளது என்பதால் இதை மொத்த சரிவின் தொடக்கமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறுகிறார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதிகரிப்பு
நிலக்கரி மின்சார தயாரிப்பில் ஏற்பட்ட சரிவு என்பது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. அதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிருந்து மின்சாரம் தயாரித்தல், அணு மற்றும் இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரித்தல் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
கடந்த வருடங்களில், நிலக்கரி பயன்பாடு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் குறைந்திருந்தாலும், சீனா போன்ற நாடுகளில் அது அதிகரித்திருந்தது.
இந்த வருடம் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளிலும் நிலக்கரி பயன்பாடு குறைவது மட்டுமல்லாமல், சீனா மற்றும் இந்தியாவிலும் குறைந்து வருகிறது.
சீனாவில் நடைபெறும் சூழலைப் புரிந்து கொள்வது சற்று கடினமானது.
சமீபத்திய அறிக்கை ஒன்றில் சீனாவில் நிலக்கரி கலன்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
எனினும், இந்த புதிய அறிக்கைப்படி இந்த வருடம் சீனாவில் மின்சாரத்திற்கான தேவை 3 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் 6.7% வரை அது குறைந்துள்ளது.
அணு, காற்றும் மற்றும் நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு இந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
அதன் விளைவாக நிலக்கரி கலங்கள் குறைந்து பயன்படுத்தப்படுகின்றன.
அந்த அறிக்கையில் நிலக்கரி கலங்கள் 49%க்கு குறைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அது இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2019ஆம் ஆண்டில் முதல்முறையாக நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் விலையில், காற்று மற்றும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அமெரிக்க வங்கிகளின் நிலை
அமெரிக்காவிலும் நிலக்கரி மின்சார தயாரிப்பு பெரிதாகக் குறைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிலக்கரி தொழிற்சாலையை மீட்டெடுக்க பெரும் முயற்சிகளைச் செய்துவரும் நிலையிலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் நிலக்கரி நிறுவனமான `முரே எனர்ஜி` உட்பட இந்த வருடம் அமெரிக்காவில், எட்டு நிலக்கரி நிறுவனங்கள் திவாலாகியுள்ளன.
அதேசமயம், இந்தியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு நிலக்கரி உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது ஆனால் அதற்கான தேவை மொத்தமாகக் குறைந்துள்ளது. அதுவும் சர்வதேச அளவைக் காட்டிலும் அது குறைவே.