உசைன் போல்ட்டின் காமலீலை : ஒரே வார்த்தையில் கருத்து தெரிவித்த காதலி
உசைன் போல்ட்டின் காமலீலை : ஒரே வார்த்தையில் கருத்து தெரிவித்த காதலி
மின்னல் வேக வீரர் உசைன் போல்டின் காம களியாட்டங்களை கேள்விபட்ட அவரது காதலி தன்னுடையை டிவிட்டர் பக்கத்தில் ஒரு வார்த்தையில் கருத்து தெரிவித்தார்.
உசைன் போல்ட் சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்ல, பெண்கள் விஷயத்திலும் அவர் கில்லாடி என்பது சமீபத்தில் வெளிவந்த செய்திகள் வெளிப்படுத்தியது.
சமீபத்தில், ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயது ஜேடி துர்தே என்ற கல்லூரி மாணவி போல்ட் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலும், குறிப்பாக மற்ற ஆண்கள் போலத்தான் போல்ட்டும் “பெர்மார்மன்ஸ்” செய்ததாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
இரவு என்றாலே கேளிக்கை விடுதி, நடசத்திர ஹோட்டல், பெண்கள் என கும்மாளம் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் உசைன் போல்ட்.
எத்தனை பெண்கள் அவர் வாழ்வில் வந்து போனாலும், அவருக்கு கேசி பென்னட் என்ற ஒரு காதலி உண்டு. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், போல்டின் காம லீலைகள் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “ கட்டுப்பாடு” என்ற ஒரு வார்த்தையில் கருத்து தெரிவித்துள்ளார் கேசி. அதாவது போல்ட் இப்படி பெண்களுடன் கும்மாளம் இடுவதை விட்டு விட்டு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார்.