Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலாளிகள் மீது வன்மமா? திட்டுவதற்காக புதிய சேவை அறிமுகம்! - எப்படியெல்லாம் பண்றாங்க!?

Scold

Prasanth Karthick

, புதன், 20 நவம்பர் 2024 (10:24 IST)

அமெரிக்காவில் ஊழியர்கள் தங்கள் முதலாளிகளை திட்டுவதற்காகவே புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதிலுமே முதலாளிகள் - ஊழியர்கள் இடையே பிணக்கு ஏற்படுவது என்பது வழக்கமாக இருக்கிறது. ஊழியர்கள் மீது அதிகமான பணிச்சுமையை சுமத்துவது, திட்டுவது போன்றவற்றை முதலாளிகள் சிலர் செய்தாலும், அதற்கு ஊழியர்கள் எதிர்வினையாற்ற முடியாத சூழலில்தான் இருப்பார்கள்.

 

அப்படி முதலாளிகள் மீது கொண்டுள்ள கோபத்தை மறைமுகமாக அவர்கள் மீது கக்க ஏற்பாடு செய்கிறது அமெரிக்காவை சேர்ந்த OCDA என்ற நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் காலிமர் இந்த நிறுவனத்தை நடத்துகிறார். இவர்களிடம் தங்களது முதலாளிகளை எப்படி திட்ட வேண்டும் என்று சொல்லி பணத்தை கொடுத்தால், இதற்காக பயிற்சி பெற்ற நபரை அலுவலகத்திற்கு அனுப்பி நேரடியாக திட்ட விடுவார்களாம். அதுமட்டுமல்லாமல் போன் மூலமாகவும் திட்டி முதலாளிகளின் தூக்கத்தை கெடுக்கும் வசதியும் உள்ளதாம்.

 

இப்படியான ஒரு சேவையை இந்த நிறுவனம் வழங்கி வந்தாலும், இந்த நிறுவனத்திற்கு காலிமர் முதலாளி என்பதால், அவரையே என்றாவது யாராவது இப்படி ரகசியமாக திட்டப் போகிறார்கள் என கிண்டல் செய்து வருகின்றனர் சிலர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 நாட்களில் 1500 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உச்சத்திற்கு செல்லும் என தகவல்..!