Publish Date: Wed, 20 Nov 2024 (10:21 IST)
Updated Date: Wed, 20 Nov 2024 (10:23 IST)
தங்கம் விலை மூன்றே நாட்களில் 1500 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நவம்பர் 17ஆம் தேதி ஒரு சவரன் 55480 என்று விற்பனையான நிலையில் இன்று 56,920 என விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் தங்கம் விலை 3 நாட்களில் சுமார் 1500 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாயும், ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,115 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 56,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,620 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறத