Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க அதிபர் தேர்தல்.. மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு டிரம்புக்கு தடை

அமெரிக்க அதிபர் தேர்தல்.. மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு டிரம்புக்கு தடை
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (17:00 IST)
அமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் செய்ததோடு, நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  டிரம்பின் செய்தித் தொடர்பாளர், ''டிரம்ப் போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்'' என்று  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் கடந்த 2020 ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் செய்ததோடு, நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது பல்வேறு மா நில  நீதிமன்றங்களில் வழக்குகள் தொரப்பட்ட நிலையில், அண்மையில் கொலராடோ நீதிமன்றம் டிரம்பை தகுதி நீக்கம் செய்து  தீர்ப்பளித்தது.

அதேபோல் கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல் நிலைத் தேர்தலுக்கான வாக்குசீட்டில் டிரம்பின் பெயர் இருக்க கூடாது என கடுமையான உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மைனே மாநிலத்திலும் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மைனே வெளியுறவுத்துறை அமைச்சர் ஷென்னா பெல்லோஸ், அரசாங்கத்தின் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக்கொள்ளளாது.  நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை டிரம்பின் தூண்டுதலினால் நடைபெற்றுள்ளது. என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் டிரம்பின் செய்தித் தொடர்பாளர், டிரம்ப் போட்டியிட தகுதியானவரா? இல்லையா ? என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 401.70 கோடி வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜிஎஸ்டிக்கு ஜொமைட்டோ நிறுவனம் பதில்..!