ஜொமைட்டோ நிறுவனம் ரூ. 401.70 கோடி வரி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்துள்ள ஜொமைட்டோ நிறுவனம் 401.70 கோடி வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி சட்டத்தின் 2017 இன் பிரிவு 74(1)ன் கீழ் ஜொமைட்டோ நிறுவனம் ரூ. 401.70 கோடி வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கான விளக்கம் கேட்டு மகாராஷ்டிர மாநில புனே மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இதற்கு ஜொமைட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது.
அந்த பதிலில் ஒப்பந்த நிபந்தனைகளின் படி, உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் தான் மக்களுக்கு சேவைகளை செய்வதாகவும், சோமாட்டோ நிறுவனம் டெலிவரி மட்டுமே செய்வதால் வரி கட்ட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது,.