செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் டிக்டாக் செயலியை இந்தியா தடை செய்தது என்பது தெரிந்ததே. இதற்கு வரவேற்பளித்த அமெரிக்கா விரைவில் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று அறிவித்தது. டிக்டாக் பயனாளிகள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தான் அதிகம் என்பதால் இந்த இரு நாடுகளிலும் தடை செய்யப்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்
இதனை அடுத்து டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்க முடிவு செய்துள்ளது
இந்த நிலையில் டிக்டாக் செயலிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் தடை விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது