Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (18:47 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவி  உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

இது அடுத்தடுத்த அலை பரவி வரும் நிலையில், உலகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த  நிலையில்,கடந்த ஜூலை 21 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக  வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. 

இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டு,  அதிபர் தன் பணிகளை கவனித்து வருகிறார் என்றும் மருத்துவர்கள் அவ்வப்போது அவருக்கு ஆலோசனை கூறி உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்,  நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அதிபருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments