Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேள்வி கேட்ட பெண் நிருபர்!: பேட்டி முடியாமலே நழுவிய ட்ரம்ப்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (12:24 IST)
அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்வியால் பேட்டியின் பாதியிலேயே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அமெரிக்கா கொரோனாவின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவ காரணம் அதிபர் ட்ரம்ப்பின் திட்டமிடப்படாத செயல்பாடுகள்தான் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அதிபர் ட்ரம்ப். அப்போது தனியார் செய்தி தொலைக்காட்சியை சேர்ந்த சீன பெண் நிருபர் ஒருவர் அதிபர் ட்ரம்ப்பிடம் “80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள போதிலும் இதை ஏன் உலகளாவிய போட்டியாக பார்க்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப் ”உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளது, இந்த கேள்வியை நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டும்” என கூறியுள்ளார். “என்னை ஏன் குறிப்பிட்டு அவ்வாறு சொல்கிறீர்கள்?” என அந்த பெண் கேட்க வும், “உங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை, இந்த கேள்வியை கேட்கும் எல்லாரையும் குறிப்பிட்டு சொல்கிறேன்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து பல நிருபர்கள் தொடர்ந்து ட்ரம்ப் பேசியது குறித்து கேள்வி கனைகளை தொடுக்கவும், பேட்டியை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளார் ட்ரம்ப். இதனால் அங்கு சற்றுநேரம் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments