பிறந்தநாள் அதுவுமா ஈபிஎஸ்-ஐ டிஸ்சப்பாய்ண்ட் செய்த இந்திய ரயில்வே!!

செவ்வாய், 12 மே 2020 (10:37 IST)
ரயில் சேவை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கோரியதை ரயில்வே நிராகரித்துள்ளது.  
 
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்கியது. 
 
நேற்று பிரதமர் மோடியுடனான வீடியோ கான்ஃபிரன்ஸில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என கோரினார். அதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என கேட்டார். 
ஆனால், இதனை இந்திய ரயில்வே நிராகரித்துள்ளது. அதாவது இன்று காலை முதலே ரயில் சேவைகள் துவங்கியது. அதன்படி, டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் மே 13 ஆம் முதல் இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும். 
 
மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து புது டெல்லிக்கு இயக்கப்படும் ரயில், மே 15 ஆம் தேதி முதல் இயங்கும். இந்த ரயிலானது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும்.
 
அதோடு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தாள். எனவே, சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBDEdapadiyaar என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா சோதனை: ரிசல்ட் என்ன?