Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

நாடு முழுவதும் 15 சிறப்பு ரயில்கள்: நிமிடங்களில் தீர்ந்த டிக்கெட்டுகள்!

Advertiesment
நாடு முழுவதும் 15 சிறப்பு ரயில்கள்: நிமிடங்களில் தீர்ந்த டிக்கெட்டுகள்!
, செவ்வாய், 12 மே 2020 (12:09 IST)
நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், மும்பை, கல்கத்தா, பாட்னா, ராஞ்சி உள்ளிட்ட ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும், பிறகு அங்கிருந்து டெல்லிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அட்டவணையின்படி வாரம்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலிருந்து டெல்லிக்கு இருமுறை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் காலை 06.30 மணியளவில் புறப்படும் என ட்தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அதிகளவில் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. சில மணி நேரங்களிலேயே 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்திருப்பதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்துகளுக்கு டோட்டல் சேஞ்ச் ஓவர்: ஆந்திரா அதிரடி முயற்சி!