Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூடிபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்; கருத்துக்கணிப்புகளால் அப்செட் ஆன ட்ரம்ப்!

சூடிபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்; கருத்துக்கணிப்புகளால் அப்செட் ஆன ட்ரம்ப்!
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (09:35 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரி நடைபெற உள்ள நிலையில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதால் ட்ரம்ப் தரப்பு அப்செட்டாகி உள்ளது.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் மீது மக்களுக்கு அபிமானம் அதிகரித்துள்ளது. அதேசமயம் ட்ரம்பின் கடந்த கால ஆட்சி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா பிரச்சினையை கையாண்டது, கறுப்பர் இன மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் கையாண்ட முறைகள் ஆகியவை தேர்தலில் குடியரசு கட்சிக்கு பெரும் அடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில் ஈடுபட்டுள்ள சி.என்.என் நிறுவனம் 15 மாகாணங்களில் நடைபெறும் தேர்தலில் 50 சதவீதம் ஜோ பிடனுக்கும், 46 சதவீதம் ட்ரம்ப்புக்கும் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில் ட்ரம்ப் 15 மாகாணங்களில் 10 மாகாணங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடுமலை சங்கர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!