Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்ய கொரோனா தடுப்பூசி சரியாக செயல்படுமா?- நோபல் வென்ற விஞ்ஞானி சந்தேகம்!

Advertiesment
ரஷ்ய கொரோனா தடுப்பூசி சரியாக செயல்படுமா?- நோபல் வென்ற விஞ்ஞானி சந்தேகம்!
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:35 IST)
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரஷ்யாவின் தடுப்பூசி உதவுமா என சந்தேகம் இருப்பதாக நோபல் பரிசு வென்ற ஆஸ்திரேலியா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. “ஸ்புட்னிக்” என பெயர் கொண்ட அந்த தடுப்பூசியின் திறன் குறித்து உலக மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியான பீட்டர் சார்லஸ் டோஹர்டி இதுபற்றி பேசியபோது “ஸ்புட்னிக் தடுப்பூசியின் திறன் எப்படி இருக்குமோ என்பது மிகவும் கவலையாக உள்ளது. இது சரிவர வேலை செய்யாவிட்டால் இதற்கு பிறகு வரும் மற்ற தடுப்பூசிகளும் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இதுசரியான பலனை அளித்துவிட்டால் உலகிற்கே நன்மை பயக்கும் என கூறியுள்ள அவர், இந்த தடுப்பூசியை ஏழை நாடுகளுக்கு வழங்க ரஷ்யா முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிதவள மேம்பாட்டு துறை to கல்வித்துறை! – மத்திய அமைச்சகத்தில் புதிய மாற்றம்!