அமெரிக்காவில் கடும் பனி காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் பல மாகாணங்களில் கடந்த சில காலமாக கடும் பனிப்பொழிவு, பனிப்புயல் வீசி வருகிறது. டெக்ஸாஸ், நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட பல மாகாணங்களில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கடும் பனியால் ஏராளமான பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களே ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒஹியோவில் உள்ள டொலிடோ பகுதியருகே சாலையில் படிந்த உறைபனியால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று ஏராளமான வாகனங்கள் மோதிக் கொண்டதில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கடும் பனியால் விமான சேவைகள் ரத்தாகி வந்ததால் பெரும்பாலான மக்கள் சாலைகளை பயன்படுத்த் தொடங்கினர். தற்போது சாலைகளில் பனி உறைவால் நடக்கும் தொடர் விபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.