பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற பகுதியில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிலுள்ள தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான் என்ற நகரில் மக்களுக்கு தேவையான பொருட்கள் விற்கும் சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு, நேற்று சந்தையில் உள்ள ஒரு கடையிலிருந்த சிலிண்டர் ஒன்று பலத்தை சத்தத்துடன் வெடித்தது.
உடனே, அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவி விபத்து ஏற்பட்டு, வாகனங்களும், பொருட்களும் எரிந்து நாசம் அடைந்தன.
இந்த விபத்தில் 12 பேர் உடற்கருகி பலியானதாகவும்,ம் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.