அமெரிக்காவை 1948களில் தாக்கிய போலியோ தற்போது மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 1948களில் பரவத் தொடங்கிய போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் உலகம் முழுவதிலும் பல குழந்தைகளை பாதித்தது. இதனால் உலகம் முழுவதும் போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது.
அமெரிக்காவிலும் தொடர்ந்து போலியோ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 1979ம் ஆண்டு அமெரிக்காவில் முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடைசியாக கடந்த 2014ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற குழந்தை ஒன்றிற்கு போலியோ கண்டறியப்பட்டது.
அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு போலியோ கண்டறியப்பட்டுள்ளது. போலியோ பாதிப்பு உள்ள பெண் எந்த உலக நாடுகளுக்கும் செல்லாத நிலையில் அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.