அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் A சத்து உள்ளது. வைட்டமின் A சத்தானது பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
அன்னாசி பழத்தில் வைட்டமின் C அடங்கியுள்ளன. இதில் கொழுப்புச்சத்து குறைந்த அளவிலும், நார்ச்சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.
தொண்டைப் புண், தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற அன்னாசிப்பழச் சாறு அருந்தி வரலாம். அன்னாசி பழ சாற்றால் வாய் கொப்பளித்தால் தொண்டை அழற்சி குணமாகும்.
அன்னாசி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.
அன்னாசி பழத்தில் வைட்டமின் B என்னும் உயிர்சத்து அதிக அளவில் உள்ளது, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி விளங்குகிறது. உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் சிறந்தது.
அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.