Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (07:53 IST)
ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
 
இந்த நிலையில், அமெரிக்காவில் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது, 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
 அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பெயர்கள் இதோ:
 
1. ஆப்கானிஸ்தான்,
2. மியான்மர்
3.சாட்
4. காங்கோ
5.எக்குவடோரியல் கினியா
6.எரித்திரியா
7.ஹைட்டி
8.ஈரான்
9.லிபியா
10.சோமாலியா
11.சூடான்
12. ஏமன்
 
 மேலும், ஏழு நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த 7 நாடுகளின் பெயர்கள் இதோ: 
 
1.புருண்டி,
2.கியூபா,
3.லாவோஸ்,
4.சியரா லியோன்,
5. டோகோ,
6. துர்க்மெனிஸ்தான்,
7. வெனிசுலா
 
வெளிநாட்டினர் வந்து அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்று அமெரிக்க அதிபர்  தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments