Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் புதின் மகள்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (23:20 IST)
ரஷ்ய அதிபர் புதின் மகள்களுக்கும் ரஷ்ய அதிகாரிகளுக்கும்  அமெரிக்க தடை உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றனர். 40 நாட்களுக்கும் மேலாக இரு நாட்டு வீரர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தினரும் ஐஎன்             எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமில்லை என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று காணொலியில் அவர் உரையாற்றியதாவது:        ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு உதவுபவர்களை தேடிப் பிடித்துக் கொன்றது. உக்ரேன்னியர்களின் கைகால்களை வெட்டினர் ரஷ்ய ராணுவத்தினர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றத்திற்காக ரஸ்ய ராணுவனும் அவர்களுக்கு உத்தரவிடுபவர்க்ளையும்  நீதியின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 இ ந் நிலையில் புதின் மகள்களுக்கு அமெரிக்க தடை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உக்ரைன்  மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ள நிலையில்,ரஷ்ய அதிபர் புதினின் மகள்களுக்கு எதிராகவும் அமெரிக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதினின் மகள்களான மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோலா ஆகியோர் அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் சொத்துகள் அமெரிக்காவில் இருந்தால் அவை முடக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் மேலும் சில ரஸ்ய அதிகாரிகளுக்கு எதிராகவும் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments