Publish Date: Thu, 23 Sep 2021 (08:15 IST)
Updated Date: Thu, 23 Sep 2021 (08:20 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை முட்டை விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததிலிருந்தே முட்டை விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஏன் முட்டை கொள்முதல் விலை மீண்டும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ரூபாய் 4.55 என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்த முட்டை நேற்று 20 காசுகள் குறைந்து ரூபாய் 4.35 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் சென்னையில் முட்டை விலை ரூபாய் 5 என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கழகம் குழு அறிவித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் முட்டை மட்டுமின்றி அசைவ கறிகளின் விலையும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
siva
Publish Date: Thu, 23 Sep 2021 (08:15 IST)
Updated Date: Thu, 23 Sep 2021 (08:20 IST)