Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் மத கலவரம்: ஐநா கண்டனம்

இலங்கையில் மத கலவரம்: ஐநா கண்டனம்
, செவ்வாய், 13 மார்ச் 2018 (12:37 IST)
இலங்கையில் இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் உள்ள கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமிய மதத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதால் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள், கோயில்கள் முதலியவை அடித்து நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு நெருக்கடியாக உள்ளது. இதனால் இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.
 
இது தொடர்பாக கடந்த வாரம் ஐநா சபையின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இலங்கையின் கலவரம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
 
இந்நிலையில், இலங்கையிலிருந்து ஐநா திரும்பிய அவர்கள் இந்த கலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர், அதில் சட்டம் ஒழுங்கை கேடு விளைவிக்கும் வகையில் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவது பெரும் கண்டனத்துகுரியது. இந்த தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளும் சசிகலா ; ஜாலியாக சுற்றும் சுதாகரன் : சிறை அப்டேட்