Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம்.. உக்ரைன் தலைநகரில் தூதரகத்தை மூடிய அமெரிக்கா..!

White House

Mahendran

, புதன், 20 நவம்பர் 2024 (19:06 IST)
உக்ரைன் தலைநகரின்  மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கிருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் கடந்த  3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா ஆயுதம் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது.  இதனால் ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய படைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார்.

இதனால் உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மீது எந்த நேரத்திலும் அணு ஆயுதங்கள் மூலம் தாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள்: அன்புமணி கடும் விமர்சனம்..!