உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் முக்கியமான விமான நிலையத்தை ரஷ்யா முழுவதும் அழித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 11 நாட்களை தாண்டியுள்ள நிலையில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் வின்னிட்சியாவில் உள்ள விமான நிலையத்தை ரஷ்யா ராணுவம் முழுவதுமாக அழித்து விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ” அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட வின்னிட்சியாவை அவர்கள் தாக்கினர். விமான நிலையத்தை முழுவதுமாக தகர்த்துவிட்டனர். நாம் கட்டியெழுப்பிய அமைதியான வாழ்க்கையையும், உக்ரேனின் பல தலைமுறைகளையும் அவர்கள் அழித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.