உக்ரைனின் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் போர் குறித்து 3 வயது சிறுவன் பாடிய பாடல் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பல உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலுமே பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் போரை கைவிட கோரி உக்ரைன் நாட்டின் 3 வயது சிறுவன் பாடிய பாடல் வைரலாகியுள்ளது. உக்ரைனின் கீவ் நகரில் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் 3 வயதான லியோனார்ட் புஷ் என்ற சிறுவன் பாடிய பாடல் கீவ் நகர மெட்ரோ திரையிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த சிறுவன் பாடிய பாடலை கேட்ட உக்ரைன் மக்கள் கண்ணீரில் மூழ்கினர்.
அந்த சிறுவன் பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாய் பரவி வரும் நிலையில் உக்ரைனில் போர் நிறுத்தம் தேவை என உலக அளவில் பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.