முதல்முறையாக அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர்: என்ன நடக்கும்?
ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முதல் முறையாக அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது என்பதும் அதன் பிறகு உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரமாக்கி உள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின் முதல் முறையாக அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரை சந்தித்து உள்ளார்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் என அதிபர் உறுதி அளித்ததை அடுத்து இன்னும் ஆயுதங்கள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.