மாஸ்க் போல் முகத்தில் படம் வரைந்து சென்ற பெண்கள்: பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:51 IST)
மாஸ்க் போல் முகத்தில் படம் வரைந்து சென்ற பெண்கள்
மாஸ்க் அணியாமல் முகத்தில் வாய் மற்றும் மூக்கு மேல் படம் வரைந்து மாஸ்க் அணிந்தது போல் வேடமிட்டு கொண்டு வணிக வளாகத்தில் சென்ற இரண்டு பெண்களின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது 
 
இந்தோனேசியாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். மாஸ்க் அணிந்துதான் வரவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கும் நிலையில் இந்த இரண்டு பெண்களும் தங்களுடைய முகத்தில் மாஸ்க் அணிவது போன்ற படத்தை வரைந்து சென்றுள்ளனர் 
 
இதனை முதலில் கவனிக்காத கடை ஊழியர்கள் அதன்பின் கவனித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் விரைந்து வந்து அந்த இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு அவர்களுடைய பாஸ்போர்ட்டுக்ளயும் பறிமுதல் செய்துள்ளனர் 
 
மாஸ்க் அணிந்து இருப்பது போல் முகத்தில் படம் வரைந்து கொண்டு இந்தோனேசியா பகுதிக்குச் சென்ற இந்த இரண்டு பெண்களும் யூடியூபர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கொரோனா கட்டுப்பாடு விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments